சாதகம் இரண்டு: இருப்பு தசை-சூரிய தசை 4 வருடம்,3 மாதம் 9 நாள்
இதற்கு பாலாரிஷ்டம் இருக்கிறதா ?
ஆமெனில் எங்ஙணம்?இல்லையெனில் எங்ஙணம்?
ஒரு எச்சரிக்கை
இந்தப் பதிவின் நோக்கம் நான் படித்த,படித்துக் கொண்டிருக்கும் சில விதயங்களைப் பற்றிய என் பார்வைகளையும் கேள்விகளையும் முன் வைக்கும் ஒரு முயற்சி.இதில் வைக்கப்படும் விதயங்களின் உண்மைத்தன்மை பற்றிய வாதப்பிரதிவாதங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை;அவை உண்மைதான்,நீங்கள் அவற்றை நம்பித்தான் ஆக வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பல்ல.
நம்பாதவர்களை வாதித்து நம்ப வைப்பதும் என் நோக்கம் அல்ல.
இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள்,அவற்றைப் பற்றிய விசாரங்களில் ஈடுபட விரும்பும் அன்பர்களுக்கு நல்வரவு!
இதில் முன் வைக்கப்படும் விதயங்களைப் மேலும் முற்றாக அறியும் முகமாக கருத்து வைக்குப் போகும் நண்பர்களுக்கு முன் நன்றிகள் !
இந்த மனையின் பாடுபொருள்கள் கலைகளில் இருந்து கடவுள் வரை எதுவாகவும் இருக்கலாம் !
இதன் நோக்கம் உபதேசமல்ல,இணைந்து அறிதல் மட்டுமே...வருக... கருத்துக்களைத் தருக!
*******************************************************
________________________________________

3 comments:
சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.எனவே பாலாரிஷ்டம் இருந்தாலும் அதற்கு இது மாற்று.அது தவிர குரு 8 இல் நின்று சனி,சந்திரன் இருவரையும் பார்க்கிறார்.உச்ச சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு நிற்கிறார். பாலாரிஷ்டம் இல்லை.
மூன்று விதயங்கள் இந்த அமைப்பில் கூரந்து நோக்கத் தக்கவை.
1.லக்னாதிபதி இரண்டு பாவிகளுக்கிடையில்-சனி,ராகு.
2.2 ம் இடத்தின் சந்திரன் பாவியுடன்
3.பிறந்த தசாநாதன் சூரியனின் மீதான் சனியின் சிறப்புப் பார்வை.
ஒருவேளை குரு 7 ல் இருந்து லக்னத்தைப் பார்த்திருந்தாலோ அல்லது வேறு கேந்திர இடத்திலோ இருந்திருந்தால் பாலாரிஷ்ட தீமை அழிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த அமைப்புடைய குழந்தை பிறந்த 13 ம் மாதம் இறந்தது.
சென்னை பித்தன்-வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி.
மெய்ப்பொருள் காண முயற்சித்த அன்பர் அறிவனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
Post a Comment